தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 7:05 PM IST

ETV Bharat / state

மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் - ஆளுநர் தமிழிசை!

புதுச்சேரி: கரோனா பரவலை தடுக்க மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என ஆளுநர் தமிழிசை கேட்டுக்கொண்டார்.

கரோனா பரவல்
கரோனா பரவல் குறித்து பேசிய ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்த புதுச்சேரி இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தினர், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவமணைக்குத் தேவையான சானிடைசர் உள்ளிட்ட மருத்துவ பொருள்களை வழங்கினர்.

இது குறித்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில், ”புதுச்சேரி இறுதியாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை நேரில் சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.

முன்னாள் மருத்துவப் பணியாளர்களும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி செலுத்த 6 லட்சம் தடுப்பூசிகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசி வந்தவுடன் தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்டும். மக்கள் பாதிப்படைகின்றனர் என்பதற்காக எல்லா வகை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். தொற்றை நாம் தவிர்த்தால் இது பரவுவதை தவிர்க்கலாம். அரசியல் கட்சிகளும் தற்போது இதுபோன்ற நேரங்களில் மக்களுக்கு பணியாற்றிட வேண்டும்.

மத்திய அரசு 5 கிலோ உணவு தானியமும் கொடுக்க அனுமதி அளித்துள்ளார்கள். அதனை வழங்கும் பணி விரைவில் புதுச்சேரியில் தொடங்கும். கரோனா பரவலைத் தடுக்க மக்கள் சமூக பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details