தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாட்டில் மூக்கையும் தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை - தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு
தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

By

Published : Oct 20, 2022, 6:25 PM IST

சென்னை: தெலங்கானா ஆளுநராக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்று நான்காம் ஆண்டு பணியினை தொடங்கி உள்ளார். இரண்டு ஆண்டுகள் தனது பயணம் குறித்த புத்தகத்தை அவர் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மூன்றாம் ஆண்டு பயணம் குறித்த புத்தகம் (Coffee table book) வெளீயிட்டு நிகழ்ச்சி கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

அப்போது பல்வேறு மூத்த பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தமிழிசை சௌந்தரராஜன் தனது மூன்றாம் ஆண்டு நிகழ்வு கொண்ட புத்தகத்தை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "இங்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி எதுவும் செயற்கை கிடையாது. நான் சாதாரணமாக மக்களோடு, மக்களாக நடைபோட்டு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இங்கு உள்ள சிலர் கூட எனக்கு விவாத மேடையில் கருத்து வேறுபாடு வந்துள்ளது. வருங்கால அரசியலில் இங்கு நடைபெறும் நிகழ்வு ஒரு வரலாற்றுப்பதிவு. தெலங்கானாவில் நான் எதிலும் இடையூறு செய்யவில்லை. எனது பணிகள் இடையூறு செய்யப்படுவதாக நினைக்கிறார்கள்.

தேசியக்கொடி ஏற்ற கூட அங்கிருக்கும் ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. சுதந்திர தினத்தன்றுகூட நான் ராஜ்பவனில் தான் தேசியக்கொடி ஏற்றினேன். தெலங்கானாவில் முழுமையாகப் பணி செய்கிறேன். புதுச்சேரியிலும் முழுமையாகப் பணி செய்கிறேன். ஆனால், தமிழ்நாட்டில் முழுமையாக அன்பை செலுத்துகிறேன்.
எங்கோ ஒருவர் துடித்துக்கொண்டு இருந்தால் அங்கே செல்வது தான் என் கடமை. நாகரிகம் அரசியலில் இருக்க வேண்டும். நான் சாப்பிடும் சாப்பாட்டுக்குக் கூட பணத்தை தெலுங்கானா ராஜ் பவனுக்கு கட்டி விடுகிறேன்.

தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

என்னை செதுக்கியவர்களைவிட என்னை ஒதுக்கியவர்கள் தான் அதிகம். என் அப்பா எதிரணியில் இருந்தாலும் நான் நல்ல முறையில் தான் கவனித்து வருகிறேன். தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்" என்றார்.

இதையும் படிங்க: தீபாவளிப் பண்டிகையில் எந்த வித மூட நம்பிக்கைக்கும் இடமில்லை - கிருஷ்ணசாமி

ABOUT THE AUTHOR

...view details