தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 11, 2021, 6:23 PM IST

ETV Bharat / state

மழை, வெள்ளம் பாதிப்பு - முதலமைச்சரிடம் கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், ஆளுநர் ஆர்.என். ரவி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சரிடம் கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி
முதலமைச்சரிடம் கேட்டறிந்த ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ட்விட்டரில் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாக, மாநில அரசு மேற்கொண்டுள்ள மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் ஜெனரல் பிரதானுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை காரணமாகத் தமிழ்நாட்டில் பெய்து வரும் கனமழைக்கு மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.

இதற்குப் பதில் அளிக்கையில் இயக்குநர் ஜெனரல் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 14 பட்டாலியன்களை நிலைநிறுத்தியுள்ளது மற்றும் அதிகப் படைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்கு ஆதரவு அளித்து வருவதற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் மாலை 6 மணிவரை விமான சேவைகள் நிறுத்தம்

ABOUT THE AUTHOR

...view details