சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “மகிழ்ச்சியான இத்திருநாளில் மக்களுக்கு, குறிப்பாக தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். தீமையை நன்மை வெற்றி கொள்வதை இந்த 'தீபத் திருவிழா' குறிப்பிடுகிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து - Happy Diwali
ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தீபாவளி வாழ்த்துகளை தமிழ்நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.
ஞானம், இரக்கம் மற்றும் நம்பிக்கையுடன் நம் இதயங்களை ஒளிரச் செய்வதில் இத்திருநாள் நமக்கு உள்ளூக்கம் அளிக்கிறது. ஒரே குடும்பமாக பண்டிகையை கொண்டாடி, நம் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம். லட்சுமி தேவி நமக்கு அமைதியையும், நல்ல உடல் நலத்தையும், செழிப்பையும் தந்து அருள்புரிவாராக. உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தீபாவளியென்றால் என்ன..? தருமபுரம் ஆதீனத்தின் விளக்கம்..!