தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மனம் நிறைந்த மக்கள் சேவை' நூலை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என். ரவி - ஒடிசா மாநில ஆளுநர்

ஒடிசாவின் முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் தனது பணிக்கால அனுபவம் குறித்து எழுதியுள்ள 'மனம் நிறைந்த மக்கள் சேவை ' புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார்.

'மனம் நிறைந்த மக்கள் சேவை' நூலை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி
'மனம் நிறைந்த மக்கள் சேவை' நூலை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

By

Published : Sep 17, 2022, 7:38 PM IST

Updated : Sep 17, 2022, 7:47 PM IST

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஒடிசாவின் முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரன் தனது பணிக்கால அனுபவம் குறித்து எழுதியுள்ள 'மனம் நிறைந்த மக்கள் சேவை ' புத்தகத்தின் தமிழ்ப் பதிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். அந்த புத்தகத்தை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பெற்றுக் கொண்டார். 2 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எம்.ராஜேந்திரன் Service Uninterrupted எனும் பெயரில் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்ட புத்தகம் தற்போது 'மனம் நிறைந்த மக்கள் சேவை' எனும் பெயரில் தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது.

அந்த விழாவில் பேசிய ஆளுநர் ரவி, "செம்மொழியான தமிழ் மொழியில் இப்புத்தகம் வெளிவருவது சிறப்பானது. எம்.எம். ராஜேந்திரனின் வாழ்க்கை வரலாறு இளைஞர்களுக்கு உந்து சக்தியாக அமையும். 1935ஆம் ஆண்டு பிறந்த எம்.எம்.ராஜேந்திரன் தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். 5 ஆண்டுகள் ஒடிசா மாநில ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவையில் களமிறங்கிய கமல்ஹாசன் - பொதுமக்களுடன் கலந்துரையாடி உற்சாகம்

Last Updated : Sep 17, 2022, 7:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details