தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாத்மா காந்தி 75ஆவது நினைவு நாள்: ஆளுநர், முதலமைச்சர் மரியாதை - மகாத்மா காந்தி சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

மகாத்மா காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குகீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தி 75ஆவது நினைவு நாள்
மகாத்மா காந்தி 75ஆவது நினைவு நாள்

By

Published : Jan 30, 2022, 12:45 PM IST

Updated : Jan 30, 2022, 1:25 PM IST

சென்னை:மகாத்மா காந்தியடிகளின் 75ஆவது நினைவு நாள் இன்று (ஜன.30) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்குகீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு அரசின் சார்பில் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை சர்வோதயா சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நூற்பு வேள்வி மற்றும் காந்திய இசைப் பாடல் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி 75ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

இந்த நிகழ்வின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மகாத்மா காந்தி 75ஆவது நினைவு நாள் அனுசரிப்பு

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விசாரணை: 36ஆவது கட்ட அமர்வுடன் நிறைவுபெற வாய்ப்பு

Last Updated : Jan 30, 2022, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details