சென்னை: சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2017-2018, 2019-2020, 2020-2021 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் பயின்ற 1,66,922 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மேலும் பட்டமளிப்பு விழாவில் 406 பேருக்கு நேரடியாக பட்டம் வழங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்வியில் சிறந்து விளங்கிய 47 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ”பட்டம் பெற பெரிதும் உழைத்து இருப்பீர்கள், ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள் இந்த சமூகத்தில் கடவுளுக்கு நிகராக பார்க்கப்படுவர்கள். உங்களுக்கு பெரிய பொறுப்பு உள்ளது. நாங்கள் அனைவரும் உங்களை மதிக்கிறோம். உங்கள் மாணவர்களுக்கு மட்டும் நீங்கள் மரியாதைக்கு உரியவர்கள் இல்லை அனைத்து சமூகத்தினருக்கும் தான்.
நம் நாடு முன்னேறி சென்று கொண்டு இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த நாடாக இருப்போம். விதையை மரமாக வளர வைப்பதில் உங்களுக்கு பொறுப்பு உள்ளது. நாம் போட்டி நிறைந்த உலகில் இருக்கிறோம். சுலபமாக வளர்ச்சி இருக்காது, முயன்று முன்னேற வேண்டும். தமிழ்நாடு மற்ற நாடுகளை விட முதன்மை மாநிலமாக செயல்படுகிறது.
"வடகிழக்கு மாநிலங்களில் 2-வது மொழியாக தமிழ்" - ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல் நாட்டின் வளர்சியில் தமிழ்நாட்டின் பங்கு இன்றியமையாததது. தமிழ்நாடு கல்வி வளர்சியை நாடு நீண்ட காலமாக அறிந்துள்ளதாக குறிப்பிட்டார். தாய்மொழியில்தான் அறிவை வளர்க முடியும் . தமிழ்மொழியின் பெருமையை மற்ற வட மாநில முதல்வர்கள் அறிந்துள்ளனர். திருக்குறளை மற்ற மாநிலங்களின் பாடத்திட்டங்களில் சேர்க்க திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டியிருக்கும் அதற்கு ஒரு கட்டமாக காசி தமிழ் சங்கத்தில் 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை பிரதமர் வெளியிட்டுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் தமிழ்மொழியை 2-ஆவது மொழியாக கொண்டு வர அம்மாநில முதலமைச்சர்களிடம் பேசியுள்ளேன்” இவ்வாறு கூறினார்.
இதையும் படிங்க:வீடியோ: பிரதமர் மோடி போலவே இருப்பார், ஆனால் அவரல்ல