தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென் மண்டல கலாசார மையத்தின் இயக்குநர் மறைவுக்கு ஆளுநர் இரங்கல்! - Purohit by Governor Banwar

சென்னை: தென் மண்டல கலாசார மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம். பாலசுப்பிரமனியத்தின் மறைவிற்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென் மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம். பாலசுப்பிரமோனியம்
தென் மண்டல கலாச்சார மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம். பாலசுப்பிரமோனியம்

By

Published : Sep 6, 2020, 6:51 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "தென் மண்டல கலாசார மையத்தின் இயக்குநர் பேராசிரியர் எம். பாலசுப்பிரமனியத்தின் திடீர் மறைவு எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தருகிறது.

மிருதங்கத்தில் புகழ்பெற்ற கலைஞராக விளங்கிய அவர் பல்வேறு இசைக் கல்லூரிகளின் முதல்வராக பணி புரிந்துள்ளார். பல்வேறு கலை வடிவங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள், பட்டறைகள் மற்றும் பயிற்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் நமது கலாசார செல்வத்தை மேம்படுத்துவதற்கும், பரப்புவதற்கும், பாதுகாப்பதற்கும் தனது வாழ்நாளை செலவிட்டுள்ளார். கலைக்கான அரிய படைப்புகளையும் ஆவணப்படுத்தியுள்ளார். கலாசாரத்தின் மூலம் தேசிய ஒருங்கிணைப்பில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

மேலும், நமது சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பழைமையான கலாசார பாரம்பரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அயராது உழைத்தார். அவரது மறைவு இந்தியாவில் உள்ள கலைஞர்களுக்கும், குறிப்பாக தென் மண்டலத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
அவரின் மறைவால் வாடும் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல கடவுளிடம் அவரது ஆத்துமா நிம்மதியாக ஓய்வெடுக்கும்படி வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:'திருநங்கைகளின் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு' - தூத்துக்குடி எஸ்.பி.,

ABOUT THE AUTHOR

...view details