தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 23, 2022, 7:53 PM IST

ETV Bharat / state

நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் - ஆளுநர்

நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் என தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி நேதாஜி 125வது பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் - ஆளுநர்
நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம் - ஆளுநர்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர், ஆர்.என்.ரவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (23.01.2022) சென்னை ஆளுநர் மாளிகையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதில் அவர்,”இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மாபெரும் வீரர் நேதாஜி, ’எனக்கு இரத்தம் கொடுங்கள், நான் உங்களுக்கு விடுதலை தருகிறேன்’ என்கிற நேதாஜியின் ஒப்பற்ற அறைகூவல் மற்றும் தலைமையின் கீழ், இளைஞர்கள் இந்திய தேசிய இராணுவம் உள்பட இந்திய சுதந்திர இயக்கத்தில் சேர ஊக்கம் பெற்றனர்.

இதுவே நம் நாட்டு விடுதலைக்கும் வழிகோலியது. ’ஒரு நபர் தன் கொள்கைக்காக உயிரையும் துறக்கலாம். ஆனால் அக்கொள்கையானது, அவரது மரணத்திற்குப் பின்னர், ஆயிரம் உயிர்களில் பிறப்பெடுக்கும்’ என்பது நேதாஜியின் மேற்கோள்.

’எப்போதும் தேசம் முதலில்’ என்ற கொள்கையை முன்னெடுப்போம்

நேதாஜியின் அறிவார்ந்த, ஆன்மிகம் சார்ந்த பாதையானது, நம் மக்கள் என்றும் நாட்டுப்பற்றிலும், தேசிய உணர்விலும் நாட்டிற்குச் சேவை செய்ய ஊக்கப்படுத்துவதாக உள்ளது. சகோதரத்துவத்தை வலுப்படுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான நமது பார்வையை மேம்படுத்தவும் நமது இளைஞர்கள் மற்றும் மக்களை நேதாஜி வலியுறுத்தினார்.

நாடு முழுவதும் ‘சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா'வைக் கொண்டாடும் இத்தருணத்தில், ‘எப்போதும் தேசம் முதலில்’ என்கிற நேதாஜியின் கொள்கையைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி எடுப்போம்” என்றார்.

இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் முதன்மைச் செயலாளர், ஆனந்த்ராவ் வி.பாட்டில், சென்னை ஆளுநர் மாளிகை உயர் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு மண்ணின் வீர மைந்தனான நேதாஜியின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க:ஞாயிறு ஊரடங்கு: 350க்கும் மேலான காவல்துறையினர் தீவிர சோதனை

ABOUT THE AUTHOR

...view details