தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: கரோனா தடுப்புப் பணியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா தடுப்பு பணியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் உத்தரவு
கரோனா தடுப்பு பணியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த ஆளுநர் உத்தரவு

By

Published : Apr 29, 2021, 6:15 AM IST

Updated : Apr 29, 2021, 6:24 AM IST

தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாகப் பல்வேறு தடுப்புப் பணிகளை அரசு மேற்கொண்டுவருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ராதாகிருஷ்ணன், காவல் துறைத் தலைவர் ஜே.கே. திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "மே 1ஆம் தேதிமுதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.

கரோனா தடுப்புப் பணியில் 7000 ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை ஈடுபடுத்த வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நடைமுறைக்கு வந்தது டெல்லி ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டம்!

Last Updated : Apr 29, 2021, 6:24 AM IST

ABOUT THE AUTHOR

...view details