தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் தான் முட்டுக்கட்டை' - தமிழக கவர்னர்

தமிழ்நாட்டில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் என மனித நேய மக்கள் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் யாக்கூப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்...!
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்...!

By

Published : Nov 15, 2022, 7:21 PM IST

சென்னை: 'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த தமிழ்நாட்டைச்சேர்ந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டப்போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றோம். தமிழ்நாட்டில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில், தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்' என மனித நேய மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் யாக்கூப் குற்றஞ்சாட்டினார்.

சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனித நேயமக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் யாக்கூப் கூறுகையில்,

'ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய சட்டப்போராட்டம் நடத்திய தமிழ்நாடு அரசைப் பாராட்டுகின்றோம். அதேபோல், தமிழ்நாட்டில் இஸ்லாமியக் கைதிகள் உள்ளிட்ட ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கிறார். அதேபோல் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்ட 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்வதை வரவேற்கிறோம்' எனத் தெரிவித்தார்.

’இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்வதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார்...!’

இதையும் படிங்க: 'நளினி ஒரு துரோகி, கொலைகாரி; மக்களிடையே மன்னிப்புக்கேட்க வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details