தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் மையமாக செயல்பட்டு வருகிறது' - திருமாவளவன் - இந்துக்களின் பகைவர்கள் தான் சங் பரிவார் அமைப்பு

ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் மையமாக செயல்பட்டு வருகிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரஜினி ஆர்.எஸ்.எஸால் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார் -  திருமாவளவன் பேட்டி!
ரஜினி ஆர்.எஸ்.எஸால் டார்கெட் செய்யப்பட்டு வருகிறார் - திருமாவளவன் பேட்டி!

By

Published : Aug 10, 2022, 10:30 PM IST

சென்னை:அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய திருமாவளவன் கூறியதாவது, கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார்.

அது தற்கொலை அல்ல கொலை என்றும் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் அங்கு 5 நாட்களாக போராட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு அங்கு வன்முறை வெடித்து பின்பு தமிழ்நாடு அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது என்று கூறிய திருமாவளவன் அங்கு தற்போது நடைபெற்று வரும் விசாரணை திசை மாறி சென்று கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினர்.

சிறப்பு புலனாய்வு குழு வன்முறையில் துளியும் தொடர்பில்லாதவர்களை வேட்டையாடுவது அதிர்ச்சி அளிப்பதாகவும் போட்டித் தேர்வுக்கு தயாராகி இருந்த மாணவர்களை சாதிப் பெயரைக் கேட்டு கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். தமிழ்நாடு அரசு உண்மையை மக்களிடத்தில் தெளிவுபடுத்த வேண்டும் என்று திருமாவளவன் அங்கு நடந்த வன்முறைக்கு தொடர்பு இல்லாதவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பள்ளி மாணவி மரணத்திற்கு நிதி கேட்டும், அவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரியும், அப்பாவி இளைஞர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் கள்ளக்குறிச்சியில் வரும் 13 ஆம் தேதி என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். பீகாரில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்தை விடுதலை சிறுத்தைகள் வரவேற்பதாக கூறிய திருமாவளவன் பாஜக உள்ளிட்ட சங் பரிவார் இயக்கங்களை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று சேர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்

கேரளாவில் பிராமணர் அல்லாதவர்களும் லட்டு செய்யலாம் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளதை வரவேற்பதாக கூறிய திருமாவளவன் அம்பானி, அதானிக்கு எடுபுடி வேலை செய்யும் அரசாக பாஜக அரசு செயல்படுகிறது. என்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாஜக அகல பாதலத்தில் சரிய வைத்து உள்ளதாகவும், பாஜக மக்களுக்கான அரசாகவும் இல்லை இந்துக்களுக்கான அரசாகவும் இல்லை என்று விமர்சனம் செய்த திருமாவளவன் பாசிசம் பாஜக அரசை விரட்டி அடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், நடிகர் ரஜினிகாந்த் ஒரு கருவியாக வைத்து பாஜக காலூன்ற நினைப்பதாகவும், ரஜினிகாந்தை பாஜக தலைவர்கள் விட தயாராக இல்லை என்றும் கூறிய அவர் ஆளுநர் ஆர்.என். ரவி என சொல்வதை விட ஆர்.எஸ்.எஸ் ரவி என சொல்லலாம், ராஜ்பவன் ஆர்.எஸ்.எஸ் மையமாக விளங்குகிறது என்று விமர்சனம் செய்தார். மேலும் பேசிய அவர் பிரிவினைவாத அரசியலை வலுப்படுத்தும் வேலைகளை ஆளுநர் செய்து வருவதாகவும், ரஜினி ஆர்.எஸ்.எஸ் நாள் டார்கெட் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்

இந்துக்களின் பகைவர்கள் தான் சங் பரிவார் அமைப்பு என்று பேசிய திருமாவளவன் இதை இந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் நிதீஷ் குமார் பீகாரில் விழித்துக் கொண்டதாகவும் இதை ஒரு ஸ்பார்க், நெருப்புப் பொறி என பார்க்கிறோம். என்று தெரிவித்த பேசிய திருமா பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்கிற கூக்குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்று பேட்டியை முடித்தார்.

இதையும் படிங்க:Vloggers கவனத்திற்கு... நெல்லூரில் களைகட்டிய ரொட்டித்திருவிழா!

ABOUT THE AUTHOR

...view details