தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு இன்று (அக்டோபர் 2) 150ஆவது பிறந்த நாள் ஆகும். இதனை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
காந்திக்கு மரியாதை செலுத்தும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
காந்திக்கு மரியாதை செலுத்தும் முதலமைச்சர் பழனிசாமி காந்திக்கு மரியாதை செலுத்தும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், கே. பாண்டியராஜன், செல்லூர் ராஜூ, தங்கமணி, கே.பி.அன்பழகன், காமராஜ், நிலோஃபர் கபில், எம்.ஆர். விஜயபாஸ்கர், திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு உள்ளிட்டோரும் கலந்துகொண்டு காந்தியடிகளின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: ஈடிவி பாரத் சிறப்புப் பாடலை பகிர்ந்தார் குடியரசு துணைத் தலைவர்