தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகாவீர் ஜெயந்தி -ஆளுநர் பன்வாரிலால் புரோகித்  வாழ்த்து! - மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

governor-banwariul-wishes-prokhit-mahavir-jayanthi
governor-banwariul-wishes-prokhit-mahavir-jayanthi

By

Published : Apr 5, 2020, 3:34 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், மகாவீர் ஜெயந்தியின் புனித சந்தர்ப்பத்தில், அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக சமண சமூகத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கடவுள் மகாவீர் கூறிய அமைதி, அகிம்சை நமது கலாசாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியுள்ளது.

உலகம் பல சவால்களை எதிர்கொள்ளும் போது, பகவான் மகாவீரரால் அறிவிக்கப்பட்ட அஹிம்சா, உண்மை, இரக்கத்தின் தத்துவங்களும், போதனைகளும் பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. இந்த மகிழ்ச்சியானச் சந்தர்ப்பத்தில், சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதையைக் கடைப்பிடிப்பதுடன், அனைவரையும் நேசிக்க வேண்டும்.

அதேபோன்று அனைவருக்கும் சேவை செய்யுங்கள் என்பது சமண மதத்தின் அடிப்படை தத்துவமாகிய இறைவன் மகாவீர் காட்டியப் பாதையை பின்பற்ற வேண்டும்" என்று அந்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கோவாவில் கரோனா வைரஸ் சமூகப் பரவல் இல்லை!

ABOUT THE AUTHOR

...view details