இதுகுறிக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், துக்கத்தையும் அளிக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2001 முதல் 2006 வரை தியாகராய நகர் சட்டமன்றத் தாெகுதியில் இருந்தும், அதனைத் தொடர்ந்து சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தாெகுதியிலிருந்தும் தேர்வு செய்யப்பட்டு, மக்கள் நலனுக்காக பல்வேறு பணிகளை செய்துவந்தார்.
ஜெ. அன்பழகன் மறைவுக்கு பன்வாரிலால் புரோகித் இரங்கல் - tamilnadu governor banwarilal purohit
சென்னை: திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
governor-banwarilal-purohit
அவரின் மறைவு தமிழ்நாடு மக்களுக்கும், திமுகவிற்கும் பெரும் இழப்பாகும். அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'கரோனா தடுப்பில் பிரதமரின் சூத்திரத்தை மக்கள் பின்பற்ற வேண்டும்'