தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுஜித்தின் மரணம் மிகுந்த துயரம்...! - ஆளுநர் இரங்கல் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

TN Governor

By

Published : Oct 29, 2019, 10:34 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க 25ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த மீட்புப் பணியில் ஐந்தாவது நாளான இன்று 88 அடி ஆழத்திலிருந்து குழந்தையின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித்தின் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதையடுத்து புதூர் கல்லறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியபின் சுஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சுஜித்தின் அகால மரணம் மிகுந்த துயரத்தை தந்துள்ளதாவும் சுஜித்தை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கு துயரத்தை தாங்கும் வலிமை கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திப்பதாகவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சுஜித்தின் மரணம் வேதனையளிக்கிறது - ரஜினிகாந்த்

ABOUT THE AUTHOR

...view details