இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயப்பூர்வமான பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஈத்-உல்-ஆதா மனிதன் கடவுளின் கட்டளைக்கு தலைவணங்குவதைக் குறிக்கிறது.
பக்ரீத் திருநாள் - தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து! - தமிழ்நாடு ஆளுநர்
சென்னை: பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதையொட்டி இஸ்லாமியர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Governor Bakreed greets the Islamic people
இறைவனின் விருப்பத்துக்கு கீழ்படிந்து, தியாகத்தை செய்ய முன்வந்த ஒரு தந்தையின் நினைவை கொண்டாடும் விழா இது. இந்த புனித நன்னாளில் தெய்வீகத்தின் நற்பண்புகளை நிலைநிறுத்துவதற்கு, நாம் அனைவரும் சமுதாயத்தில் இரக்கம், தாராள மனப்பான்மை, சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதன் மூலம் தீர்மானிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.