தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாதவர்கள் மீது நடவடிக்கை! - Government takes action against holders who do not use cable set-top box

சென்னை : தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை!
அரசு கேபிள் செட்டாப் பாக்ஸ் பயன்படுத்தாமல் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை!

By

Published : Aug 16, 2020, 3:03 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் சிறந்த டிஜிட்டல் ஒளிபரப்பு கேபிள் டிவி சேவையை குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. இதுவரை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மொத்தம் 35 லட்சத்து 97 ஆயிரத்து 479 செட்டாப் பாக்ஸ்களை வழங்கியுள்ளன.

தற்பொழுது சந்தாதாரர்களுக்கு செட்டாப் பாக்ஸ்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 7 லட்சத்து 60 ஆயிரம் 470 செட்டாப் பாக்ஸ்கள் செயலாக்கம் செய்யப்படாமல் உள்ளதாக தெரிகிறது. எனவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி சேவை வழங்கும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இந்த செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்ய வேண்டும்.

செயலாக்கம் செய்ய இயலவில்லை என்றால், செயலாக்கம் செய்யப்படாத செட்டாப் பாக்ஸ்களை இந்நிறுவனத்திற்கு உடனே திருப்பி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை இந்நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்டு, செயலாக்கம் செய்யாமல் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பான செயலாகும்.

சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ள செட்டாப் பாக்ஸ்கள் அரசுக்கு சொந்தமானதாகும். எனவே, செயலாக்கம் செய்யப்படாமல் உள்ள செட்டாப் பாக்ஸ்களை உடனே செயலாக்கம் செய்ய வேண்டும் அல்லது இந்நிறுவனத்திடம் திருப்பி வழங்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பொதுமக்களும் இந்நிறுவனத்தின் கேபிள் டி.வி ஆபரேட்டர்களிடம் உடனே திருப்பி கொடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details