தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பகுதிநேர ஆசிரியர்களின் பணி நேரம் நீட்டிப்பு: குறைந்த ஊதியத்தில் அதிக வேலை வாங்குவதாக குற்றச்சாட்டு - jacto jio protest

சென்னை: பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நேரத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுடன், குறைவான சம்பளத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது என தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

part time teachers
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

By

Published : Feb 2, 2021, 9:18 PM IST

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் பேசியதாவது, ’கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தில் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என பலமுறை பள்ளிக்கல்வித் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையால் ஓய்வு பெற்ற பின்னர் பணப் பயன்கள் பெறுவதற்கும், ஓய்வு பெறுவதற்கும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அரசு மனமிறங்கி ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்துள்ளதை வரவேற்கிறோம்.

பிரதான கோரிக்கை:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்களித்தார். எங்களது பிரதான கோரிக்கையும் அதுதான். அதை நிறைவேற்ற வேண்டும். போராட்டத்தின்போது வலியுறுத்திய ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாமல், போராட்டத்தில் பங்கு பெறாத சங்கங்களை அழைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கேலி செய்வது போல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனத் தொடர்ந்துகூறிய எதிர்க்கட்சித் தலைவரை நேரில் சந்தித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து உள்ளோம். எதிர்க்கட்சித் தலைவர் கொடுக்கும் அழுத்தங்கள் அரசால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டுமென தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின் குரல் கொடுத்து வந்தார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கோரிக்கை வைப்பார். அந்தத் திட்டமும் நிறைவேற்றப்படும்.

இதை வலியுறுத்தி சென்னையில் வரும் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து இருந்தோம். அந்த முடிவினை செயல்படுத்துவது குறித்து வியாழக்கிழமை ஆலோசனை செய்து அறிவிக்கப்படும். அதிமுக ஆட்சியில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட 53 ஆயிரம் ஆசிரியர்கள் முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன்

அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய ஆட்சியாளர்களுக்கு மனமில்லை. பகுதிநேர ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்பது ஏமாற்றும் வேலை.

ஏற்கனவே மூன்று அரை நாட்கள் பணி செய்தவர்களுக்கு 7,700 ரூபாய் சம்பளம் இருந்ததை 10 ஆயிரமாக உயர்த்தி மூன்று முழு நாட்கள் பணி செய்யவேண்டுமென ஏமாற்றியுள்ளது. இரண்டு மடங்கு வேலையை வாங்கிவிட்டு அவர்களுக்கு குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்துள்ளது. மூன்று அரை நாட்கள் வேலை நேரமாக இருந்தபோது அவர்கள் வேறு பணிக்கு சென்று தங்களின் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டனர். பகுதிநேர ஆசிரியர்கள் 13 ஆயிரம் பேரை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்’ என்றார்.

இதையும் படிங்க:ஆசிரியர்கள், ஊழியர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுவருகிறது- பேட்ரிக் ரெய்மாண்ட்

ABOUT THE AUTHOR

...view details