தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருது பெற்ற ஆசிரியை பள்ளிக் கல்வி இயக்குநருடன் சந்திப்பு!

சென்னை: வீரதீர செயலுக்கான விருது பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை முல்லை பள்ளிக் கல்வி இயக்குநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

வீரதீர செயலுக்கான விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியை  வீரதீர செயலுக்கான விருது  Meeting with the Director of the Government School Teacher who received the award for heroic deed  Government School Teacher Meeting with the Director of Education  Government School Teacher  Republic day  ஆசிரியை முல்லை  Award-winning government school teacher for heroic deed  Award-winning government school teacher
Award-winning government school teacher for heroic deed

By

Published : Jan 26, 2021, 3:56 PM IST

சென்னையில், இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் வீர தீர செயலுக்காக முதலமைச்சரால் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை முல்லை பள்ளிக் கல்வித் துறை இயக்குநரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

கடந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டம், புலிக்குளம் அரசுப் பள்ளி அருகே எரிவாயு வெடி விபத்திலிருந்து தன் உயிரையும் பொருட்படுத்தாமல் 26 பள்ளி மாணவர்களின் உயிரை காப்பாற்றியதற்காக ஆசிரியை முல்லைக்கு தமிழ்நாடு அரசு இந்த ஆண்டு வீர தீர செயல் புரிந்தவர்களுக்கான விருதை வழங்கியது.

இது குறித்து ஆசிரியை முல்லை கூறுகையில், "ஒரு ஆசிரியையாக அந்த நேரத்தில் மாணவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்குள் இருந்தது. என்னுடைய செயலுக்காக அரசு விருது வழங்கி அங்கீகரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:பிரதான் மந்திரி பால புரஸ்கார் விருது: சிறுமியுடன் உரையாடிய பிரதமர்!

ABOUT THE AUTHOR

...view details