சென்னை:44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை ஒட்டி, தமிழ்நாடு அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்பட்ட சதுரங்கப்போட்டியில் வெற்றிபெற்ற 152 மாணவர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூரு வரை அழைத்துச்செல்லப்பட்டனர்.
மாணவ-மாணவிகளை அழைத்துச்செல்லும் சிறப்பு விமானத்தை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தா.மோ. அன்பரசன், மெய்யநாதன், தங்கம் தென்னரசு, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இந்த நிலையில் மதியும் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் மாலை 4:30 மணி அளவில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. சென்னை வந்த மாணவ-மாணவிகள் முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்தது குறித்து தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இதுகுறித்துப் பேசிய மாணவ- மாணவிகள், 'அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் முதல்முறையாக விமானப்பயணம் மேற்கொண்டது மிகவும் மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. விமானத்தில் அலுவலர்கள் உணவுகளை வழங்கினர். அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு முதல்முறையாக விமானத்தில் செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி’ எனத் தெரிவித்துக்கொண்டனர்.
சிறப்பு விமானத்தில் சென்னை டூ பெங்களூரு வரை பறக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள்..! இதையும் படிங்க:தமிழ்நாட்டை உலுக்கிய கச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!