சென்னை: கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அளிக்கப்பட்ட 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பட்டியலின்படி அரசுப்பள்ளிகளில் 45 லட்சத்து 17 ஆயிரத்து 677 பேர் படிக்கின்றனர். அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 22 லட்சத்து 28 ஆயிரத்து 992 பேர் படிக்கின்றனர்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் விபரம்
மாநில அரசின் அனுமதி பெற்று இயங்கும் தனியார் பள்ளிகளில் 14 லட்சத்து 40 ஆயிரத்து 945 பேரும், மெட்ரிக் பள்ளிகளில் 38 லட்சத்து 58 ஆயிரத்து 563 மாணவர்களும், சிபிஎஸ்இ பள்ளியில் 11 லட்சத்து 29 ஆயிரத்து 943 மாணவர்களும், ஐஎஸ்சிஇ, ஐஜிசிஎஸ்இ, கேம்பிரிட்ஜ் பள்ளிகளில் 81,094 மாணவர்களும், ரயில்வே, ராணுவம், சைனிக் பள்ளிகளில் 59,071 மாணவர்களும் படித்துள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்கள் 65 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். பிடெக் உணவுத் தொழில்நுட்பம், கோழியினத் தொழில்நுட்பம், பால்வள தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் 29 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
கால்நடை மருத்துவம்
கால்நடை மருத்துவம் அறிவியல் பட்டப்படிப்பில் 2016-17 ஆம் ஆண்டில் 306 இடங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 17 பேர் சேர்ந்துள்ளனர்.
2017-18 ஆம் ஆண்டில் 348 இடங்களில் 12 பேர்
2018-19 ஆம் ஆண்டில் 341 இடங்களில் 10 பேர்
2019-20 ஆம் ஆண்டில் 322 இடங்களில் 13 பேர்