தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம் - அதிரடி உத்தரவு

தனியார் பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவிட்டுள்ளார்.

புகார் பெட்டி  பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு  பள்ளிகளில் புகார் பெட்டிகள்  complaint box in schools  complaint box  Government order  Government order to keep complaint box in schools
மாணவர்கள்

By

Published : Oct 8, 2021, 12:30 PM IST

தமிழ்நாட்டில் அரசு, தனியார் பள்ளிகளில் மாணவிகள் ஆசிரியர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன.

இது குறித்து சில மாணவிகள் காவல் துறையினரிடம் புகார் அளித்ததும், அந்தப் புகார்களுக்குத் தீர்வு எட்டப்பட்டது.

பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கு பல்வேறு வழிமுறைகளை முன்னதாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. மேலும் இந்நிலை தொடராமல் இருப்பதற்காக, தமிழ்நாடு அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் ஏற்படாத அளவுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புகார் பெட்டிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் அருகில் உள்ள காவல் நிலைய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விவரங்களையும் மாணவிகளுக்கு தெரியும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும், கல்வித்துறை அலுவலர்கள், தனியார் பள்ளிகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறதா என்பதை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ் சாப்பிட்டால் தங்க நாணயம் பரிசு!

ABOUT THE AUTHOR

...view details