தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் ஆய்வகங்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை - தனியார் ஆய்வகங்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை

தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

government-of-tamil-nadu-warns-private-laboratories
government-of-tamil-nadu-warns-private-laboratories

By

Published : Jan 5, 2022, 12:42 PM IST

சென்னை : உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்து வருகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் தொற்று நூற்றுக்கணக்கில் உயர்ந்து வருகிறது.சென்னையில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனியார் ஆய்வகங்களில் கரோனா பரிசோதனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், தனியார் ஆய்வகங்கள் பரிசோதனையை முறையாக மேற்கொள்வதுடன் முடிவுகளை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடுப்பூசி போட்டும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே இருங்கள் - மா.சு அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details