சென்னை: தொடர் மழை காரணமாக தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தக்காளி கொள்முதல்
இதன் மூலம் வெளிச்சந்தையில் தற்போது 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் தக்காளி, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 85 முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும். இதற்காக தினசரி 15 மெட்ரிக் டன் தக்காளி கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதையும் படிங்க:முதலமைச்சரை ரோம் நகருக்கு வரச்சொல்லி அழைத்த கத்தோலிக்க பேராயர்கள்