தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘பார்த் நெட் திட்டம்’ - நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை! - சென்னை மாவட்டம்

அனைத்து கிராமப் புறங்களிலும் பார்த் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Government of Tamil Nadu
Government of Tamil Nadu

By

Published : Nov 19, 2020, 11:01 AM IST

சென்னை:தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இணையவசதி அளிக்கும் பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த 1,871 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து திட்டத்தின் தொகையை ரூ.2,222 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 544 கிராமங்களிலும் அதிவேக இணைய வசதி அளிப்பதற்கான ‘பாரத்நெட்’ என்ற திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல்படுத்த கடந்த ஆண்டு இதற்கான கருவிகள் கொள்முதலுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது.

இந்நிலையில், ஒப்பந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என மத்தியவர்த்தகத் துறை அமைச்சகம் ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், குறைகளை களைந்து மீண்டும் ஒப்பந்தம் கோரும்படியும் தெரிவித்தது. தற்போது மீண்டும் ஒப்பந்தம் கோருவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியது.

இந்த திட்டத்தை செயல்படுத்த 1,871 கோடி ரூபாய் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் கூடுதல் சிறப்பம்சங்களை சேர்த்து திட்டத்தின் தொகையை ரூ.2,222 கோடியாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், மத்திய அரசு சார்பில் ரூ.1815 கோடி வழங்கப்படும் எனவும் மீதமுள்ள தொகை மாநில அரசால் ஒதுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சி. பொன்னையன் தலைமையில் பாலின சமத்துவம் தொடர்பான கருத்தரங்கு

ABOUT THE AUTHOR

...view details