தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கு நீட்டிப்பு: அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Government of Tamil Nadu issues curfew extension order
Government of Tamil Nadu issues curfew extension order

By

Published : Nov 30, 2020, 3:31 PM IST

சென்னை: கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கம் தமிழ்நாட்டில் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் டிசம்பர் 31ஆம் தேதிவரை தளர்வுகள் உடன் ஊரடங்கு நீட்டிப்புக்கான அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் அதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அணையில்,

  • டிசம்பர் 7ஆம் தேதிமுதல் கல்லூரி இறுதியாண்டு வகுப்புகள் தொடங்க அனுமதி.
  • நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, மருத்துவம் மற்றும் அனைத்து மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் (இளநிலை (UG), முதுநிலை (PG), வகுப்புகள் டிசம்பர் 7ஆம் தேதிமுதல் திறக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும், 2020-2021 கல்வியாண்டில் சேரும் புதிய மாணாக்கர்களுக்கான வகுப்புகள் பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • டிசம்பர் 14ஆம் தேதிமுதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி.
  • சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி
  • நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதி
  • இ-பதிவு முறை தொடர்ந்து அமல், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு கட்டாயம் (ஆந்திரா, கேரளா, புதுச்சேரி தவிர)
  • நீச்சல் குளம், பயிற்சிக்கு செயல்பட மட்டும் அனுமதி
  • 65 வயதிற்கு மேற்பட்டோர் பத்து வயதுக்குள்பட்டோர், கர்ப்பிணிகள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வர வேண்டும்.
  • கண்டிப்பாகப் பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இதைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பொது ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details