சென்னை: புளியந்தோப்பில் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு குடிசை பகுதி மக்கள் அங்கு குடியமர்த்தப்பட்டனர். இந்த நிலையில் குடியிருப்புகள் தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரை அடுத்து ஐஐடி வல்லுநர்கள் தலைமையில் குழு அமைத்து ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
கேபி பார்க் குடியிருப்பு குறைபாடு: 45 நாள்களுக்குள் முடிக்க உத்தரவு - சென்னை மாவட்ட செய்திகள்
புளியந்தோப்பு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் புதிய சிமெண்ட் பூச்சுகளை 45 நாள்களுக்குள் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
45நாள்களுக்குள் முடிக்க உத்தரவு
இந்த நிலையில் தரமற்ற குடியிருப்புகளில் சிமெண்ட் பூச்சு கலவை மூலம் சரிசெய்யவும், கழிவறைகளில் பழைய பீங்கான்களைப் பெயர்த்து எடுத்து புதிய பீங்கான்கள் பதிக்கவும், இந்தப் பணிகளை 45 நாள்களுக்குள் முடிக்கவும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க : மாமல்லபுரத்தில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு