தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

114 புதிய பாலங்கள் - தமிழ்நாடு அரசு அனுமதி!

தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் 114 இடங்களில் புதிய பாலங்கள் கட்ட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

By

Published : Feb 9, 2022, 12:29 PM IST

சென்னை :தமிழ்நாட்டில் உள்ள ஊரகப்பகுதிகளில் புதிய பாலங்கள் கட்டுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (பிப். 9) அரசாணை ஒன்றை வெளியீட்டுள்ளது.

அதில், "அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 114 ஊரகப்பகுதிகளில் ரூ. 336 கோடி செலவில் புதிய பாலங்கள் கட்டப்படும்.

பாலங்கள் கட்டும் பணியை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு பாலம் கட்டப்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : காணாமல்போன வட மாநில தம்பதியினரின் குழந்தை மீட்பு

ABOUT THE AUTHOR

...view details