தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இனி சனிக்கிழமை பத்திர பதிவு செயல்படும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - வார இறுதி நாளான சனிக்கிழமைகளிலும் பத்திர பதிவு

வார இறுதி நாளான சனிக்கிழமை அன்றும் பத்திர பதிவு அலுவலகம் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இனி சனிக்கிழமைகளில் பத்திர பதிவு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
இனி சனிக்கிழமைகளில் பத்திர பதிவு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

By

Published : Apr 29, 2022, 10:04 AM IST

Updated : Apr 29, 2022, 11:06 AM IST

தமிழகத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமை அன்றும் செயல்படும். அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், "வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் 2022-2023 – ஆம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமை அன்றும் செயல்படும் என்ற அறிவிப்பினை அமைச்சர் வெளியிட்டார்.

இந்த அறிவிப்பிற்கிணங்க மாநிலத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்கள் வார இறுதி நாளான சனிக்கிழமை் இயங்கும் வகையிலும் அவ்வாறு இயங்கும் அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்.

இதனால் ஏற்படும் கூடுதல் பணிச்சுமை மற்றும் பணியாளர்களது நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சனிக்கிழமை பணி நாளை ஈடு செய்யும் விதமாக வாரநாட்களில் வேலை குறைந்த ஏதேனும் ஒரு நாளில் விடுப்பு வழங்கிட ஏதுவாக உரிய மாற்று ஏற்பாடு செய்யும் வகையில் உரிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சரால் சட்டமன்றப் பேரவையில் அறிவிப்பு செய்த நாளான 28.04.2022 அன்றே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதலமைச்சரை வேந்தராகக் கொண்டு புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கும் சட்ட மசோதா நிறைவேற்றம்

Last Updated : Apr 29, 2022, 11:06 AM IST

For All Latest Updates

TAGGED:

tn order

ABOUT THE AUTHOR

...view details