தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் தொடக்கம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு - தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் நகரப்பகுதிகளில், அதிகப்படியாகத் தேக்கமாகும் மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.

govt
govt

By

Published : Sep 21, 2021, 7:31 PM IST

தமிழ்நாட்டில் எதிர்நோக்கியுள்ள வடகிழக்குப் பருவமழையினால் நகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம், மழைநீர் புகும் வாய்ப்பு உள்ளது. இதனால் தேக்கமாகும் மழைநீரால் டெங்கு, மலேரியா நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகும் சூழ்நிலை உள்ளது.

மேலும் மழைநீர் கால்வாய்களுடன் கலந்து தேங்குவதால், இதர தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படவாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மாபெரும் தூய்மைப்பணி முகாம்

பொதுமக்களுக்கு எந்தவித சுகாதார இடர்பாடுகளும் ஏற்படாமல் தவிர்த்திடும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 20.09.2021 முதல் 25.09.2021 வரை "மாபெரும் மழைநீர் வடிகால் தூய்மைப் பணி முகாம்" அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் ஆகியவற்றில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று (செப்.20) சேலம் மாநகராட்சியில் தொடங்கி வைத்துள்ளார்.

இப்பணிக்காக கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் அனைத்தையும் பெரிய மழைநீர் வடிகால், நடுத்தர மழைநீர் வடிகால், சிறிய மழைநீர் வடிகால் என வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடிகால் படிவுகளை அகற்றுவதற்கு பொக்லைன், ஜெட்ராடிங் இயந்திரம், ஜேசிபி இயந்திரம், தேவைப்படும் இதர இயந்திரங்களைப் பயன்படுத்தி இப்பணியானது துரிதமாக நடைபெற அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்பணிக்காக உள்ளாட்சிகளிலுள்ள வார்டுகளை ஆறு பிரிவுகளாகப் பிரித்து, ஆறு நாட்களுக்குள் பணியினை முடிப்பதற்கு ஏதுவாக நகரப்பகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன .


மாநகராட்சிகள்
14,1362 மாநகராட்சிகளிலுள்ள 829 வார்டுகளில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 23,838 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தப் பணியினை மேற்பார்வையிட 1,572 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

நகராட்சிகள்
7 நகராட்சி நிர்வாக மண்டலங்களிலுள்ள 121 நகராட்சிகளில் 3,497 வார்டுகளில் 4,591 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு 42,634 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்தப் பணியினை மேற்பார்வையிட 3,051 பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் .

பேரூராட்சிகள்

மொத்தமுள்ள 528 பேரூராட்சிகளில் 7,951 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் மற்றும் 205 கி.மீ., நீளமுள்ள கால்வாய்களும் தூர்வாரப்படவுள்ளன. இதற்காக 2,830 இயந்திரங்களும் 28,624 பணியாளர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர் .

பெருநகர சென்னை மாநகராட்சி
பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 178 சாலைகள், மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்காக 2,414 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் கால்வாயின் மொத்த தூரம் 82.884 கி.மீ., ஆகும்.

மழைநீர் வடிகாலைத் தூய்மைப்படுத்தி, எடுக்கப்படும் வடிகால் படிவங்களை அகற்றும் பணி 227 சாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக 722 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். வடிகால் படிவுகளை அகற்றும் பணி 2,718 ஆகும்.

இந்தப் பணிகளுக்காக 7 ஜெட்ராடிங் மெஷின், 3 ரோபோடிக் எக்சிவேட்டர், 1 ஆம்பியன், 3 மினி ஆம்பியன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளது.

மாநில அளவில் தூய்மைப்பணி மேற்கொள்ளும் விவரங்கள் சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் 14 மாநகராட்சிகள், 121 நகராட்சிகளில் மற்றும் 528 பேரூராட்சிகளில் 9,097 இயந்திரங்கள் மூலம் மழைநீர் வடிகால் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பணிக்காக 97,550 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 4,623 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் .

இதையும் படிங்க: இனி அரசுத்துறைகளில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை

ABOUT THE AUTHOR

...view details