தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் - டாஸ்மாக் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) அறிவித்துள்ளது.

government-liquor-stores-open-tomorrow
government-liquor-stores-open-tomorrow

By

Published : May 15, 2020, 9:07 PM IST

இது குறித்து அறிவிப்பில், டாஸ்மாக் வழங்குவது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க நிபந்தனைகளுடன் இன்று அனுமதியளித்தது. அந்த உத்தரவைத் தொடர்ந்து மதுபானக் கடைகள் நாளை (16.5.2020) முதல் திறக்கப்படும் என தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) அறிவித்துள்ளது.

சென்னையை பொருத்துவரை பெருநகர சென்னை காவல்துறை எல்லை மற்றும் திருவள்ளூர் மாவட்டம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்கப்படமாட்டாது. மேலும் அங்கு மால்கள், வணிக வளாகங்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் இக்கடைகள் இயங்காது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நாள் ஒன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். மதுபாட்டில்கள் வாங்க வரும் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி

ABOUT THE AUTHOR

...view details