தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரேஷன் கடை ஊழியர்களுக்கு வார்னிங்

நியாய விலைக் கடைகளில், பொருட்கள் வாங்காமல் வாங்கியதாக குறுஞ்செய்தி பெறப்படுவதாகப் புகார் எழுந்து வரும் நிலையில், போலி பில் போடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!
ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

By

Published : Nov 24, 2022, 2:25 PM IST

சென்னை:இதுகுறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை விடுத்துள்ள சுற்றறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் PO கருவிகள் நிறுவப்பெற்று, பயோமெட்ரிக் முறை மூலம் கட்டுப்பாட்டுப் பொருட்களும் சிறப்புப் பொது விநியோகத் திட்ட பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படாத பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி (SMS) வருவதாக பொதுமக்கள் ‘Portal’ எனும் இணையதளத்தில் புகார்கள் வரப் பெறுகின்றன. எனவே வழங்கப்படாத பொருட்களுக்கு வழங்கப்பட்டதாக குறுந்தகவல் பெறப்பட்டதாக புகார்கள் வரப்பெற்றால், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மண்டல கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடை விற்பனையாளர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.

மேலும் புகார்களில் குறிப்பிட்ட முறைகேடுகள் நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு கடுமையான தண்டனை வழங்கப்படும். முறைகேடுகளை கண்காணிக்க தவறும் சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:நவ.24 முதல் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 - மயிலாடுதுறை ஆட்சியர்

ABOUT THE AUTHOR

...view details