தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பிரிவு செயல்படும் நேரம் அறிவிப்பு! - சென்னை

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

government-hospital-op-time-public-welfare-department-secretary-gagandeepsingh-bedi-said
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும்-மக்கள்நல்வாழ்வுத்துறை

By

Published : Jul 5, 2023, 4:04 PM IST

சென்னை:அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், புறநாேயாளிகள் பிரிவில் இருக்க வேண்டிய நேரம் குறித்து, மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தனது கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ககன்தீப்சிங் பேடி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் எளிமையாகவும், தரமான மருத்துவச் சேவையை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். அதனை அடைவதற்காக, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெளிநோயாளிகள் பிரிவில் சேவைகள் சரியான நேரத்தில் தொடங்கப்பட வேண்டும்.

எனவே, மருத்துவக்கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஆகியோர், வெளிநோயாளிகளுக்கான நேரங்களை நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி கடைபிடிப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட வேண்டிய நேரம்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவிற்கான பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் 24 மணி நேரமும் உள்நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும்.

மருத்துவமனை உள்ளூர் அதிகாரி காலை 7 மணிக்கு வருகைப் புரிந்து புறநோயாளிகள் பிரிவிற்கான பணிகளை கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் கண்காணிப்பாளர் காலை 8 மணிக்குப் பணியில் இருக்க வேண்டும். அதுமட்டும்மல்லாது 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் தயாராக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் புறநாேயாளிகள் பிரிவு காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையில் செயல்பட வேண்டும். 24 மணி நேரப் பணிக்கான மருத்துவர்கள் மதியம் 3 மணி முதல் 5 மணி வரையில் புறநோயாளிகள் பிரிவினை கவனிக்க வேண்டும். மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் 5 மணி வரையிலும் பணியில் இருக்க வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 அல்லது 2 அல்லது ஒரு மருத்துவர் இருந்தால், காலை 9 மணி முதல் மதியம் 4 மணி வரையில் புறநோயாளிகள் பிரிவு செயல்பட வேண்டும். 5 மருத்துவர்கள் இருந்தால் புற நோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரையில் 2 மருத்துவர்களும், மதியம் 2 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரையில் ஒரு மருத்துவரும் பணியில் இருக்க வேண்டும்.

இந்த கால அட்டவணைப்படி மருத்துவர்கள் பணியில் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்'' என ககன்தீப்சிங் பேடி அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :Viral Video - 'போட்டோ தானே எடுக்கிற' - குழந்தையின் மழலைப் பேச்சு

ABOUT THE AUTHOR

...view details