தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆன்லைன் ரம்மிக்கு அவசர சட்டம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

ஆன்லைன் ரம்மி குறித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசாணை
ஆன்லைன் ரம்மி குறித்து அவசர சட்டம் பிறப்பிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் அரசாணை

By

Published : Jun 11, 2022, 1:34 PM IST

ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் பிறப்பிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில்,ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் சங்கரராமன், சட்ட ஆலோசகர் ஸ்நேஹா, அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் திருமதி லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வான்கடே, ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் - புதிதாக 219 பேர் பாதிப்பு... மக்களே உஷார்...


ABOUT THE AUTHOR

...view details