தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கரோனா நெகட்டிவ் சான்று அவசியம்' - ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான நெறிமுறைகளை, அரசு வெளியிட்டுள்ளது.

By

Published : Jan 6, 2023, 10:55 PM IST

ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஜல்லிக்கட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, "ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி. இருவரும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மாடுபிடி வீரர்கள் 2 டோஸ் கரோனா தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.‌

அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பார்வையாளர்கள் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் 2 தினங்களுக்கு முன்பு கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. காளைகள் அவிழ்த்து விடப்படும் நேரத்திலிருந்து அனைத்து நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதை, ஒரு நாளுக்கு முன்கூட்டியே உறுதி செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைத்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். காளைகளுக்கு தேவையற்ற வலியை உருவாக்கும் எந்தச் செயல்களும் அனுமதிக்கப்படாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Kamal hassan on jallikattu:"மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டம்" - கமல்ஹாசன்!

ABOUT THE AUTHOR

...view details