இது குறித்து உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை மேலும் உயர்த்தவும், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவித்தார்.
அதன் அடிப்படையில் 2020-21ஆம் நடப்பு கல்வியாண்டில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், கரூர் மாவட்டம் தரகம்பட்டி, விழுப்புரம் மாவட்டம் வானூர் (திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு), விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம், ராணிப்பேட்டை மாவட்டம் ஜம்புகுளம் ஆகிய இடங்களில் இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், கோயம்புத்தூர் மாவட்டம் புலியக்குளத்தில் ஒரு மகளிர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என மொத்தம் ஏழு கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.