தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் - சென்னை மாவட்ட செய்திகள்

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம் அளித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்
உயர் நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

By

Published : Apr 22, 2021, 3:57 PM IST

தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 400 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு 150 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 250 மெட்ரிக் டன் ஆக்சிஜன் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 65 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு வழங்கியதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் ரெம்ட்சிவிர் மருந்து கையிருப்பு இல்லை என்றால் அரசிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

அரசு மருத்துவமனைகளில் உள்ள 9,600 வெண்டிலேட்டர்களில் 5,887 வெண்டிலேட்டர்கள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் உள்ள 6,000 வெண்டிலேட்டர்களில், 3,000 வெண்டிலேட்டர்கள் கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 84 ஆயிரத்து 361 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து மே-2 வாக்கு எண்ணிக்கை நாளில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் ரெம்ட்சிவிர், ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பு மருந்துகள் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவசர காலங்களில் துரிதமாக முடிவெடுக்க சுதந்திரமான சிறப்பு அலுவலர் குழுவை நியமிக்க வேண்டும்.

தடுப்பு மருந்துகளின் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பிச்சை எடுங்கள் - ஆக்சிஜன் பற்றாக்குறை விவகாரத்தில் கடுப்பான நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details