இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்கள் அரசின் நலன் கருதி பணியில் அமர்த்தலாம் என அரசாணை உள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனரின் பதவிக்காலம் நீட்டிப்பு! - அரசு தேர்வுத்துறை இயக்குனர்
சென்னை: அரசு தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றிவரும் வசுந்தரா தேவிக்கு மேலும் மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றி வரும் வசுந்தராதேவி வரும் மார்ச் 31 ஆம் தேதியன்று வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறுகிறார்.
தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்வு விடைத்தாள்களை திருத்தம் செய்து ,தேர்வு முடிவுகளை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவதற்கு தொடர்ந்து கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே அரசு விதிகளின்படி அவருக்கு மார்ச் 31 முதல் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி உத்தரவிடப்படுகிறது" எனக் கூறப்பட்டிருந்தது.