’கரோனா காலத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு நன்றி!’
சென்னை: கரோனா காலத்தில் தொடர்ந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்களுக்கு, சமூக ஆஆர்வலர் ஒருவர் நான்கு கட்டைக் கால்களுடன் வேடமிட்டு வித்தியாசமான முறையில் நன்றியைத் தெரிவித்தார்.
சென்னை, தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் பகுதியில் உள்ள அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் மதன் (37). இவர் சமூக ஆர்வலர். சென்னை தி நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றில் வெரைட்டி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இவர் சில ஆண்டுக்கு முன்பு காற்று நுழைய முடியாத ஸ்ப்ரிங் பலூனில் தலையில் நுழைத்து சுமார் ஒருமணி நேரம் மூச்சை அடக்கி சாதனை படைத்திருந்தார். இதனைப் பாராட்டி தமிழ்நாடு பல்கலைகழகம் மதனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
தற்போது, கரோனா காலத்தில் மக்களுக்கு பல்வேறு விதமாக இவர் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்துள்ளார். உயர்ந்த மனிதன் போல் வேடமிட்டும், டிராகன் போன்ற உருவம் பொறித்த ஆடை அணிந்து கொண்டு கரோனாவை விரட்டுவது போன்ற பல்வேறு விழிப்புணர்வுகளை அவர் ஏற்படுத்தி உள்ளார்.