தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியீடு! - MK Stalin

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியீடு!
விருப்ப ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு புதிய வெயிட்டேஜ் தொடர்பான அரசாணை வெளியீடு!

By

Published : Jun 28, 2022, 12:57 PM IST

சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 58 ஆக இருந்த போது, அரசு ஊழியர் ஒருவர் 54 வயது மற்றும் அதற்கு கீழ் வயதிற்குள்ளாக விருப்ப ஓய்வு பெற்றிருந்தால், அவர்களுக்கு கூடுதலாக ஐந்து ஆண்டு பணியாற்றியதாக வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு அதன் அடிப்படையில் அவருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், 54 க்கு பதிலாக 55 வயது மற்றும் அதற்கு கீழ் வயதுக்கு உள்பட்டு பணியாற்றி விருப்ப ஓய்வு கொடுத்தல், அதேபோல் ஓய்வு பெறும் வயது 56 என்றால், அவருக்கு நான்கு ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்பட்டு, 60 ஆண்டுகள் அவர் பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்.

மேலும், 57 வயதில் ஓய்வு பெற்றால் மூன்று ஆண்டுகள் வெயிட்டேஜ் கொடுக்கப்படும். அதேபோல் 59 வயதில் விருப்பு ஓய்வு கொடுத்தால், அவர் 60 வயது பணியாற்றியதாக கருதப்பட்டு மாத ஓய்வூதியம் கணக்கிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:SBI: வெளிநாட்டுப் பயணங்களுக்கான விடுப்பு பயணச்சலுகையை திரும்பப்பெற்றது தொடர்பான வழக்குகள் தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details