சென்னை:ஆவடி அருகேவுள்ளபட்டாபிராம் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர், அருண்குமார். இவர் சேப்பாக்கம் மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் இவருக்கு கடன் அதிகமாக உள்ளதாகவும்; வேலையில் பதவி உயர்வு கிடைக்கவில்லை என்பதாலும் கடந்த இரண்டு நாள்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 24) காலை அவர் அறையில் இருந்து வெளியே வராததால் அவரது மனைவி கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.