தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கரோனா தடுப்பூசி பரிசோதனை குறித்து அரசு ஆலோசனை

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை கரோனா நோயாளிகளுக்கு அளிப்பது குறித்து அரசு ஆலோசனையில் உள்ளது என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

Corona Vaccine Testing
Corona Vaccine Testing

By

Published : Aug 26, 2020, 11:54 AM IST

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அதன் உடன் இணைந்துள்ள அஸ்ட்ரா ஜெனகா என்ற மருந்து நிறுவனம் தடுப்பூசியை எந்தெந்த நாடுகளில் தயாரிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்துவருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா என்ற தடுப்பூசி நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் உள்ளது. இந்தியாவிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்து பார்ப்பதற்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் முடிவு செய்திருக்கிறது.

அதன் அடிப்படையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை என இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் சுமார் 300 பேரிடம் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தி சோதனை நடத்தப்பட வாய்ப்புள்ளது. தடுப்பூசி திட்டத்துக்கு தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு துறை இயக்குநர் செல்வவிநாயகம் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, கரோனா நோயாளிகளுக்கு தடுப்பூசியை செலுத்துவது குறித்து அரசிடம் ஆலோசனை செய்துவருகிறோம். அரசின் அனுமதியுடன் முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னர் இதற்கான பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட் - 19: இந்தியாவின் உதவியை நாடும் ரஷ்யா

ABOUT THE AUTHOR

...view details