சென்னை: வடபழனி ஆற்காடு சாலையில் மெட்ரோ பணிக்காக பள்ளம் தோண்டும் பணியானது நடைபெற்று வருகிறது. இன்று (டிச.2) காலை 5.15 மணியளவில் ரத்னா ஸ்டோர் அருகே ராட்சத கிரேன் மூலமாக பள்ளம் தோண்டும் பணியானது நடந்து வந்தது.
திடீரென ராட்சத கிரேன் கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாக சென்ற 159a எண் கொண்ட அரசு பேருந்தின் மீது மோதியது. இதில் பேருந்தின் முன்பகுதி மற்றும் இடதுபுறம் முழுவதுமாக சேதமடைந்தது. பயணிகள் இல்லாமல் சென்ற பேருந்து என்பதால், எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. ஆனால், விபத்தில் பேருந்தை ஓட்டி வந்த பழனி என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.