தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலை, அறிவியல் கல்லூரியில் சேர ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ் பதிவேற்றம்! - government arts and science college student admission

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேருவதற்கான சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம்
ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் சான்றிதழ் பதிவேற்றம்

By

Published : Jul 25, 2020, 7:17 AM IST

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளம் மூலமாக விண்ணப்ப பதிவு கடந்த 20ஆம் தேதி தொடங்கப்பட்டது. ஜூலை 21ஆம் தேதி வரை 1,00,620 விண்ணப்ப பதிவுகளும், ஜூலை 22ஆம் தேதி 53,342 விண்ணப்ப பதிவுகளும், ஜூலை 23ஆம் தேதி 34,924 விண்ணப்ப பதிவுகளும், ஜூலை 24ஆம் தேதி, 20,351 விண்ணப்ப பதிவுகளும் பெறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,09,237 மாணவர்கள் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளனர். இதில் 1,27,975 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்ப பதிவிற்கு ஜூலை 31 கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 24) முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிழ்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே, மாணவர்களின கோரிக்கையை ஏற்று, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய தொடங்கப்படும் நாளான ஜூலை 25 முதல் ஆகஸ்டு 5ஆம் தேதி வரை என அறிவிக்கப்பட்டதை மாற்றி, ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details