தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்க்க அரசு ஒப்புதல் - journalist

ஊடகங்களில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஊடகங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பத்திரிக்கையாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க அரசு ஒப்புதல்
ஊடகங்களில் பணிபுரியும் அனைத்து நிலை பத்திரிக்கையாளர்களையும் நலவாரியத்தில் சேர்க்க அரசு ஒப்புதல்

By

Published : Nov 9, 2022, 11:04 PM IST

சென்னை: பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆன்லைன் வழியே விரைவில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கும் எனவும் தமிழ்நாடு அரசு தகவல், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்ட செய்தி துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் இன்று (நவ.9) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டும், நலத்திட்ட உதவிகள் வழங்க ஏதுவாக பத்திரிகையாளர் நல வாரிய குழு அமைக்கும் ஆணைகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் பத்திரிகையாளர் நலக்குழுவின் மூன்றாவது கூட்டம் இன்று நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் மிக முக்கியமாக நல வாரியத்தின் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு, அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்.

இன்று (நவ.9) நடைபெற்ற பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை ஊழியர்களுக்கும், பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்க ஏதுவாக அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் 10 பேர் மட்டுமே நலவாரிய உறுப்பினராக சேர முடியும் என்று இருந்த நிலையில், தற்போது நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஆசிரியர், உதவி ஆசிரியர், ஆடியோ மற்றும் இன்ஜினியர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடிய ஊழியர்களை பத்திரிகையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:தனியார் வசமாகும் அரசுப்பணி விவகாரம்: தலைமைச்செயலக சங்கத்தினர் மனு

ABOUT THE AUTHOR

...view details