தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2019, 1:42 PM IST

Updated : Nov 5, 2019, 7:16 PM IST

ETV Bharat / state

மாநில வன விலங்கு நல வாரியம்: புதிய நிர்வாகிகளை நியமித்து அரசாணை வெளியீடு!

சென்னை: தமிழ்நாடு அரசு மாநில வனவிலங்கு நல வாரியத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

animal

மாநில விலங்கு வாரியத்துக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணையில் தெரிவித்துள்ளதாவது:

வன விலங்கு சார்ந்த திட்டங்கள், வன விலங்கு பாதுகாப்பு, மனித - விலங்கு மோதல்களுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள மாநில அளவிலான விலங்குகள் நல வாரியம் அமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதற்காக 2014ஆம் ஆண்டு மாநில விலங்கு நல வாரியம் அமைக்கப்பட்டது. தற்போது வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் முதலமைச்சர் தலைமையில் வனத் துறை அமைச்சர் துணைத் தலைவராகவும் எம்.எல்.ஏ.க்கள் குன்னூர் ராமு, உளுந்தூர்பேட்டை குமரகுரு, உசிலம்பட்டி நீதிபதி ஆகியோர் உறுப்பினர்களாகவும் இக்குழுவில் உள்ளனர்.

மேலும், தலைமைச் செயலர் தலைமையில் பல்வேறு துறை உயர் அலுவலர்கள் 14 பேர் அலுவலக உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சி... மத்திய அரசின் அரசாணையை எரித்து போராட்டம்!

Last Updated : Nov 5, 2019, 7:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details