தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு! - Government announced

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசு அறிவிப்பு
நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அரசு அறிவிப்பு

By

Published : Jun 16, 2022, 6:01 PM IST

சென்னை: கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு கடந்த ஆண்டு முதல் ஊதியம் மறுநிர்ணயம் செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆண்டு முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் விடுத்த கோரிக்கையினை ஏற்ற தமிழ்நாடு அரசு, நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களை பெறவும் தற்போது உத்தரவிட்டுள்ளது.

இந்த அகவிலைப்படி உயர்வினால் கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாய விலைக்கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளர்கள் மற்றும் 2,852 கட்டுநர்கள், என மொத்தம் 22,510 பணியாளர்கள் பயன்பெறுவார்கள்.

இதையும் படிங்க:ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

ABOUT THE AUTHOR

...view details