தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பீதி: அரசுப் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம் - அரசுப்பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

சென்னை: கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்கு போர்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

coronavirus
coronavirus

By

Published : Mar 19, 2020, 10:18 PM IST

கரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்துகளுக்கு அந்தந்த பணிமனைகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள்

ஏற்கனவே மக்கள் கூட்டம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரசுப் பேருந்துகள் மூலம் நோய் பரவாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடந்து தனியார் ஆம்னி பேருந்துகளிலும் நோய்த் தொற்று பரவாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன.

ABOUT THE AUTHOR

...view details