சமீபத்தில் இங்கு குடியிருந்த நல்லகண்ணு தாமாகவே முன்வந்து அவரே வீட்டை காலி செய்வதாக தெரிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு குடியிருந்த தி.நகர் பகுதியிலிருந்த வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு 1953ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அது மிகவும் பழுதாகி இருந்ததால், அதில் குடியிருந்தவர்களை அங்கிருந்து காலி செய்யும்படி தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டது. மேலும் பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு, வேறு வீடுகள் வழங்கும் என்று தெரிவித்திருந்தது.
நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு!
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணுவிற்கு அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
government allocate house for nallakannu
இதற்கிடையே துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொலைபேசி வாயிலாக நல்லகண்ணுவைத் தொடர்புகொண்டு, “உங்களுக்கு அரசு வீடு தர தயாராக வைத்திருக்கிறோம்” என்றார். இந்நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவிற்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது நல்லகண்ணு விரைவில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டில் குடியேறுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
TAGGED:
nallakannu